கூலி ; விமர்சனம்

 

சென்னையில் மேன்சன் நடத்தி வரும் ரஜினிகாந்துக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது நண்பர் சத்யராஜ் இறந்துவிட்டார் என தகவல் வருகிறது.. கிட்டத்தட்ட 30 வருடம் அவருடன் தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்லும் ரஜினிக்கு சத்யராஜ் இயற்கையாக மரணம் அடையவில்லை என்கிற உண்மை தெரிய வருகிறது.

அதன் பின்னணியில் சத்யராஜ் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞான கருவியும் அங்கு கண்டைனர் தொழில் செய்து வரும் நாகார்ஜூனுக்கு தான் கண்டுபிடித்த மெஷின் மூலமாக சட்ட விரோதமாக சில செயல்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு சத்யராஜ் ஆளானார் என்றும் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து நண்பனின் மரணத்திற்கு பழி வாங்குவதற்காக அங்கேயே தங்குகிறார் ரஜினிகாந்த்.

சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன் அவரை துவக்கத்திலிருந்தே’ எதிரியாக பார்க்க நாகார்ஜுனனின் வலது கையாக அந்த ஹார்பரில் வேலை பார்க்கும் சௌபின் ஷாகிரால் தேவையில்லாத பல இடைஞ்சல்கள் உண்டாகிறது. இதையெல்லாம் ரஜினிகாந்த் எப்படி சமாளிக்கிறார், தனது நண்பனின் மரணத்திற்கு பழி தீர்த்தாரா என்பது மீதி கதை.

ரஜினிகாந்த் வழக்கம் போல் ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார். இளமைக்கால ரஜினிகாந்தை கிராபிக்ஸ் உதவியுடன் ரசிக்கும்படி காண்பித்திருக்கிறார்கள். குறிப்பாக வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்துமே அந்த கால ரஜினிகாந்தை நன் கண்முன் நிறுத்துகிறது.

ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜுனாவுக்கு அதிக வேலையில்லை. தோற்றத்திலும் அநாயாசமான உடல் மொழியிலும் எதிர்மறை மனம் கொண்ட பாத்திரமாக இருந்தாலும் ஈர்க்கிறார்.

ஆனால் நாகார்ஜுனாவின் அடியாளாக வரும் செளபின் சாஹிர் தான் படம் முழுக்க கோலோச்சுகிறார்.நன்றாக நடித்திருக்கிறார் என்பதைத்தாண்டி மோனிகா பாடலில் அவருடைய நடனத்துக்குப் பெரும் வரவேற்பு.

சத்யராஜுக்கு குறைவான நேரம்தான்.அதிலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அமீர் கான், விக்ரம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுப்படுத்துகிறார். ஒரு சண்டை மற்றும் சில காட்சிகளில் வரும் உபேந்திரா நிறைவு. ஸ்ருதிஹாசன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பைக் காட்டியுள்ளார்.

இவர்களைத் தவிர ரச்சிதா ராம், கண்ணா ரவி ஆகியோர் மட்டும் மனதில் நிற்கிறார்கள். அதிலும் ரச்சிதா ராமின் விஸ்வரூபம் மிரட்டல் ரகம். லொள்ளு சபா மாறனுக்கு நல்ல வாய்ப்பு.. அவரும் அதி பயன்படுத்தி இருக்கிறார். மேலும் காளி வெங்கட், சார்லி, ரெபா மோனிகா ஜான், திலீபன், தமிழ், ரிஷிகாந்த், பூஜா ஹெக்டே என பலரும் நடித்துள்ளனர்.

அனிருத்தின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டல்.. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பும் இல்லை என்றால் கூலி நிறைவை அளித்திருக்காது.. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளுமே பிரமாண்டம்.

முந்தைய காட்சியின் கடைசியில் முழுமையில்லாமல் முடிப்பது, அடுத்த காட்சியில் அதை ட்விஸ்ட்டாகச் சொல்வது என யூகிக்கும்படியான திருப்பங்களுடன் செல்கிறது குறிப்பாக கடத்தல் கூட்டத்திற்குள் ரஜினிகாந்த் நுழைந்த உடன், கதை எங்கேங்கேயோ பயணிக்க துவங்குகிறது திரைக்கதை.. இடைவேளைக்கு முன்பு வரும் ட்விஸ்ட், சௌபின் ஷாஹிரின் கதாபாத்திர மாறுதல்கள் கச்சிதம். ஆனால் ஒரு முறை கொஞ்சம் அலட்சியமாக படம் பார்த்தால் சரியாக புரியாமல் போகலாம். அதுமட்டுமே படத்தின் மைனஸ்.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading