நாகேஷின் பேரன் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் உருட்டு உருட்டு. பள்ளிப் பருவத்தில் நாயகனும் மற்றும் எதிரி நண்பர்களும் ஒருவருக்கொருவர் மற்றவர்களை பழி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த தருணத்தில் வாலிபப் பருவத்திலும் அது தொடர கதாநாயகியிடம் நாயகனை சிக்க வைக்க முயற்சிக்கும் முயற்சி நடக்கிறது.
அது காதலாக மாற காதலில் நாயகி வண்ணத்துப்பூச்சியாய் பறக்கும் போது நாயகன் எப்பொழுதும் குடித்துக் கொண்டே இருக்க இறுதியில் குடிக்கும் அந்த மதுவை அவன் தலையில் ஊற்றி உயிரை எடுக்கிறாள் நவீன கண்ணகியான நம்ம படத்தின் நாயகி இதுவே உருட்டு உருட்டு படத்தின் கதைக்களம்
நாயகன் நாகேஷ் பேரன் என்பதால் நாம் ஒரு எதிர்பார்ப்புடன் படத்தை பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே நமக்கு அளிக்கிறது. பார்ப்பதற்கு அழகான நாயகன் நடிப்பும் சிறப்பு. ஆனால் அவரின் கதாபாத்திரம் படத்தின் துணை நாயகன் போல் இருக்கிறது. இயக்குனர் நாயகனை நம்பாமல் மொட்டை ராஜேந்திரனை நம்பி படத்தை எடுத்திருக்கிறார் என்பது அவர் கதாபாத்திரத்தில் தெரிய வருகிறது.
போலி மருத்துவராக வரும் மொட்டை ராஜேந்திரனுக்கு மூன்று மனைவிகள். மூவரும் ஒருவருக்கொருவர் கவர்ச்சியில் சளைத்தவர் இல்லை என்பது அவர்களின் உடை, முக பாவனை, வசன உச்சரிப்பு இதிலிருந்து தெரிய வருகிறது. மூவருக்கும் ஒரு ஐட்டம் டான்ஸ் வாங்கிய டிக்கெட் பணத்திற்கு இந்தப் பாடல் மட்டுமே நமக்கு ஒரு ஆறுதல்.
ஆனால் நாயகி கவர்ச்சியுடன் நாயகனை அழைத்தால் அவனுக்கு மாதுவை விட மதுவே தன் விருப்பம் என்பது போல் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். மது குடித்தால் மாது அருகில் இருந்தால் நிச்சயம் காம ரசம் நிச்சயம் இருக்கும். ஆனால் நாயகனை ஆண்மை இல்லாதது போல் நமக்கு தெரிய வருகிறது. இது இயக்குனரின் குற்றம்.
நாயகியின் தந்தை கட்டப்பஞ்சாயத்து நில புரோக்கராக ஓபனிங் சீன் பிரமாதமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ஏன் எதற்கு அதனால் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்பது நமக்கு புரியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் நம்மை மேலும் மேலும் வாட்டி வதைக்கிறார் இயக்குனர்.
குடி குடியை கெடுக்கும். ஆனால் இங்கு குடித்தால் கொலையும் நடக்கும் என்பதே கதைக்களம். கிளைமாக்ஸ்சில் நாயகனை எரிப்பது என்பதை முடிவாக வைத்துக் கொண்டு இயக்குனர் அதற்கு எப்படி திரைக்கதை வடிப்பது என்பது தெரியாமல் போற போக்கில் எதையோ எழுதி எதையோ எடுத்து படத்தை முடிக்கிறார்.
கோடிகளில் படத்தை எடுக்கும் நீங்கள் அதற்கு முன் கதைகளிலும் காட்சிகளிலும் கவனம் செலுத்தி அனுபவம் உள்ள சிலரை அருகில் வைத்துக் கொண்டு திரைக்கதை உருவாக்கி இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்









Leave a Reply