கல்லூரி மாணவர் தேர்தலில் எம்எல்ஏவின் மகன் அராஜகம் பண்ணி போட்டியிட்டு ஜெயிக்க நினைக்கிறான். ஆனால் ஒரு நல்ல மாணவன் அவனை எதிர்த்துப் போட்டியிட முயற்சிக்கிறான். அந்தப் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் தன்னுடன் அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான ஹீரோ லெனினை அழைத்து இந்த தேர்தல் முறையாக நேர்மையாக நடக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறார்.
இன்னொரு பக்கம் நாயகி அஸ்மினும் அதே கல்லூரியில் தான் படிக்கிறார் அவர் எம்எல்ஏ மகனின் தங்கைதான். ஆனால் நாயகன் லெனின் மீது அவருக்கு காதல். அதனால் நேர்மையான மாணவன் பக்கம் சேர்ந்து அண்ணனுக்கு எதிராக தேர்தல் வேலைகள் செய்கிறார். அவனும் அதில் ஜெயிக்கிறான்.
இந்த நிலையில் மாணவிக்கு அவரது உறவுக்காரரான ஒரு மோசமான மணமகனை அவரது அப்பா ஆர்.வி உதயகுமார் தேர்வு செய்கிறார். அவரிடம் இருந்து காப்பாற்றி அவரை திருமணம் செய்ய திட்டம் போட்டு கல்லூரியில் நடக்கும் கலை விழா தினத்தன்று அதை நிறைவேற்ற லெனின் மற்றும் நண்பர்கள் திட்டமிடுகின்றனர்.. ஆனால் அங்கே எதிர்பாராத விதமாக நாயகியின் மாமா நாயகனால் கொலை செய்யப்படுகிறார்.
அந்த கொலையை மறைக்க நாயகன் மற்றும் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். இந்த கொலையை அவர்களால் மறைக்க முடிந்ததா ? இவர்கள் இவரின் திருமணம் நடைபெற்றதா ? நாயகனின் நிலை என்ன ஆனது என்பது மீதி கதை.
நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் லெனின் மாணவர்கள் மத்தியில் கெத்தோடு சுற்றும் ஒரு கதாபாத்திரத்தில் முடிந்தவரை நன்றாகவே நடித்திருக்கிறார். அவருக்கு இதுதான் முதல்படம் என்றால் நம்பமுடியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஸ்மினுக்கு கதையில் முக்கியமான இடம் இருக்கிறது. காதல் காட்சிகளில் வசீகரம். காதலனுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி உதவுவதுடன் கிளைமாக்ஸில் ஸ்கோர் செய்கிறார்.
இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், ஒரு தந்திரமான அரசியல்வாதியாகவும், ஒரு கண்டிப்பான தந்தையாகவும் கதையின் முக்கிய வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் அனுபவம் வாய்ந்த நடிப்பால் கவர்கிறார்.
முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.
படம் ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்தாலும் தனது ஒளிப்பதிவின் மூலம் கல்லூரி வளாகத்தைக் கொஞ்சம் புதுசாகவே காட்டுகிறார். ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்.
கைலாஷ் மேனன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பின்னணி இசையில் திரைக்கதையோட்டத்தில் இருக்கும் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறார்.
கல்லூரிக் களம் மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் பொன்.பார்த்திபன். அதேபோல கதைக்களம் ஒரு கல்லூரிதான் என்றாலும் அதற்குள் மாணவர் அரசியல் மற்றும் மர்மத் திரில்லர் பாணியை இணைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக வடிவமைத்துள்ளார். பல்வேறு பரிமாணங்களை வைத்து, அடுத்து என்னநடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடும் படபடப்போடும் பார்க்க வைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஆர்.வினோத். .









Leave a Reply