சீதா பயணம் ; விமர்சனம்

 

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் சீதா பயணம்.

பிரபல கோடீஸ்வரர் தொழிலதிபர் சத்யராஜ். அவரது மகள் ஐஸ்வர்யா. சிறுவயதிலேயே தாயை இழந்து விட்டதால் தானும் திருமணம் ஆகி சென்றால் தந்தையை கவனிக்க ஆளில்லையே என்பதால் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு செமினார் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் நீண்ட தூர பயணம் மேற்கொள்கிறார் ஐஸ்வர்யா. அப்போது வழியில் லிப்ட் கேட்டு ஏறுகிறார் இளைஞர் நிரஞ்சன். அதனைத் தொடர்ந்து வழியில் சில மனிதர்களை சந்தித்து நிரஞ்சனையும் அவரது ஊரில் இறக்கிவிட்டு தான் போக வேண்டிய இடத்திற்கு செல்கிறார் ஐஸ்வர்யா.

அந்த சமயத்தில் அவர் காரில் இருந்து இறங்கும் அதே நேரத்தில் அவர் செல்ல இருந்த அந்த கட்டிடம் வெடித்து சிதறுகிறது. அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா சில நொடிகள் நாம் முன்கூட்டியே சென்று இருந்தால் நம் உயிரும் போய் இருக்குமே, இந்த தாமதப்படுத்தலுக்கு வழியில் கார் பயணத்தில் யார் யார் நம்மை தடுத்து தாமதப்படுத்தினார்களோ அவர்களால் தான் நம் உயிர் காப்பாற்றப்பட்டது, அவர்களுக்கு நன்றி சொல்லச் செல்ல வேண்டும் என நினைக்கிறார்.

தந்தையிடம் இதை சொல்லிவிட்டு நிரஞ்சன் ஊருக்குச் அவருக்கு நன்றி சொல்ல செல்கிறார். அங்கே அவரது தாத்தா பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட குடும்பத்தில் பாசத்தில் நெகிழ்ந்து போகிறார். அங்கிருந்து நிரஞ்சனுடன் கிளம்பி போகும்போது, தான் சந்தித்த நபர்களை மீண்டும் தேடிச்சென்று சந்திக்கிறார். இதில் இருவருக்கும் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. இந்த பயணத்தில் நிரஞ்சன் மீது காதல் ஆகிறார். ஐஸ்வர்யா. அது இவர்களது திருமணத்தில் கை கூடியதா என்பது மீதி கதை.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பு, நடனம் மற்றும் தோற்றம் என அனைத்துத் துறைகளிலும் தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்..

கதாநாயகன் நிரஞ்சன் ஒரு கண்ணியமான நடிப்பை வழங்கியுள்ளார், குறிப்பாக சண்டைக் காட்சிகளில் சிறப்பாகச் செய்துள்ளார்.

அர்ஜுனின் சிறப்புத் தோற்றம் படத்திற்குப் பலம் சேர்க்கிறது. பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். துருவ் சார்ஜாவின் தோற்றம்: இரண்டாம் பாதியில் வரும் துருவ் சார்ஜாவின் சிறப்புத் தோற்றம் தேவையற்ற பில்ட்-அப் போலவும் ஓவராகவும் தோன்றுகிறது.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் சில காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இசை: அனூப் ரூபன்ஸின் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை அர்ஜுனின் பழைய படங்களின் இசையை நினைவுபடுத்துவது போல் உள்ளது..

படத்தின் முதல் பாதியில் வரும் “20 விநாடி வாழ்க்கை” என்ற கான்செப்ட் சுவாரஸ்யமாகவும் நன்றாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.. ஆனால், அதை ஒரு சுவாரஸ்யமான கதையாக மாற்றுவதில் இயக்குனர் அர்ஜுன் தவறிவிட்டார். காரணம் படத்தின் கதாபாத்திரங்களுடன் எந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பும் இல்லை:

தேர்ந்தெடுத்த கதைக்களம் நன்றாக இருந்தாலும், அதைத் திரையில் கொண்டு வந்த விதத்தில் தேவையான ஆழமும் சுவாரஸ்யமும் இல்லை. ஐஸ்வர்யா அர்ஜுனின் நல்ல நடிப்பிற்காகவும், சில சுவாரஸ்யமான காட்சிகளுக்காகவும் இதைப் பார்க்கலாம்,

 

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading