ஆழி ; விமர்சனம்

 

போட் மெக்கானிக் என்கிற பெயரில் மிகப்பெரிய தாதாவாக வலம் வருகிறார் சரத்குமார். ஒரே செல்ல மகள் தேவிகா சதீஷை பாசமாக வளர்க்கிறார். ஆனால் அவரோ கல்லூரியில் தன்னுடன் படிக்கும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அம்மாஞ்சி இளைஞனான இந்திரஜித்தை காதலிக்கிறார். இது சரத்குமாருக்கு கோபத்தை உண்டாக்குகிறது.

காதலனுக்கு புத்தி சொல்லி அனுப்புவார் என நினைத்தால் அவரைக் கடத்திக் கொண்டு படகில் ஏற்றிச் சென்று நடுக்கடலில் நிறுத்தி வைத்து விட்டு அவரை படகில் உள்ள அரை ஒன்றில் கட்டிப்போட்டு அடித்து சித்தரவதை செய்கிறார் சரத்குமார்.

இந்த சமயத்தில் அதே படகில் இன்னொரு பக்கம் இருக்கும் அறையில் சரத்குமாருக்கு எதிர்பாராத சிக்கல் ஒன்று ஏற்படுகிறது. அவரையும் யாராவது ஒருவர் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது ? கட்டி போடப்பட்டிருந்த அந்த காதலன் தப்பித்தாரா ? சரத்குமார் நிலை என்ன ஆனது ? இதற்கெல்லாம் மீதி படம் விடை சொல்கிறது..

மனப்போராட்டத்தில் இருக்கும் தந்தையாக சரத்குமார் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. அவரது முகபாவனைகள் மிகைப்படுத்தப்படாமல் தயக்கத்தையும் அமைதியான மனப்போராட்டத்தையும் காட்டுகின்றன. அதிலும் இடைவேளைக்கு பின் அவருக்கு ஏற்படும் அந்த விபரீதமும் அத்துடன் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும் சபாஷ் சொல்ல வைக்கின்றன.

மகளாக நடித்த தேவிகா சதீஷ் மற்றும் அவரது காதலராக நடித்துள்ள இந்திரஜித் இருவரும் இயல்பாக நடித்துள்ளனர்., அவர்களுக்கிடையேயான உறவை திரையில் ஆழமாக்க காட்சிகள் அதிகம் இல்லை. காதலன் இந்திரஜித், தனக்கு மரண பயத்தை காட்டிய சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் விறுவிறுப்பு கூடுகிறது.

ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர். படகின் உட்புறத்தில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் படகின் இன்ஜின் அறை என குறுகிய இடத்தில் காட்சிகளை படமாக்கியது சற்று கவனம் ஈர்க்கிறது. ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சுமார் ரகம். வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் அதே ரகம் தான்.

திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வது ஒரு குறை. மகளின் காதலனாய் இருக்கும் இடத்திலேயே நாலு தட்டு தட்டி மிரட்டினால் போதாதா ? அதற்காக நடக்கடலுக்கு படகில் கொண்டுவந்து சித்தரவதை செய்யும் யுக்தி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த விடாமல் செய்து விடுகிறது.

எதிரி என்றாலும் அவன் ஆபத்தில் இருந்தால் உதவ வேண்டும் என்கிரா கருத்தை சொன்னதற்காக இயக்குநர் மாதவ் ராமதாஸை பாராட்டலாம்.

 

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading