துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும்  வெளியாகிறது !!

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் (  Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு விவரங்கள்:

லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading