தடை அதை உடை ; விமர்சனம்

சினிமா இயக்குநராகும் கனவில் இருந்தாலும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர் இளைஞர்கள் மூவர். ஒருமுறை தயாரிப்பாளரிடம் இரண்டு கதைகள் சொல்ல அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் மூன்றாவது முறையாக அவர்கள் சொன்ன கதை ஓகே ஆகிறது. இப்படி கதை சொல்லி அதை படமாகும் முயற்சியே படத்தின் முதல் பாதி..

இன்னொரு பக்கம் முதல் கதையில் வந்த கதாப்பாத்திரங்கள் அடுத்த கதையில் வேறு மாதிரி சித்தரிக்கப்படுகின்றன. இதில், அங்காடி தெரு மகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமூக வலைத்தளத்தின் மோகத்தால் மகேஷின் சகோதரி தற்கொலை செய்துக் கொள்கிறார்..

இந்த தற்கொலை சம்பவத்திற்கும் முதல் பாதியின் கதைக்கும் இணையும் இடத்தில் சில திருப்பங்கள் நடக்கின்றன. இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன தொடர்பு, சாதிக்க துடிக்கும் அந்த இளைஞர்கள் சாதித்தார்களா என்பது மீதிக்கதை. விடை சொல்கிறது..

கல்வியின் பெருமையை உயர்த்தி காட்டுவதுடன் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை சீரழித்து விடக்கடாது என்கிற அறிவுரையும் சொல்லும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார் ‘அங்காடித்தெரு’ மகேஷ். நிறைவான நடிப்பையும் வழங்கியுள்ளார்.

சதீஷாக திருக்குறள் குணா பாபு, கம்பனாக பாரிவள்ளல், கார்த்திக்காக திருவாரூர் கணேஷ், வினோத்தாக மஹாதீர் முகமது ஆகியோர் தங்கள் பங்கு சரியாகச் செய்திருக்கிறார்கள்.

தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் எளிய இடங்களையும் வித்தியாசமான கோணங்களினால் ரசித்து பார்க்கும் விதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் சாய்சுந்தர் பொருத்தமான பின்னணி இசை மூலம் படத்தைப் உயர்த்திப் பிடித்துள்ளார்

அறிமுக இயக்குநர் என்றாலும் சுவாரஸ்யமாக மட்டுமின்றி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு மற்றும் ஒரே படத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் ஒரே படத்தில் சொலி விட வேண்டும் என்கிற துடிப்புடன் கதை சொல்லி இருக்கிறார் அறிவழகன் முருகேசன்… சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளை சொல்லி எச்சரிப்துடன் கதை சொல்லலில் புதிய பாணியை கையாண்டு ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading